சேவலை கடித்துதுப்பி சுடலைக்காளிக்கு பலி கொடுத்து விட்டு, கடைவாயில் இறுக்கமாகதொரப்பு(ஆட்டின் நுரையீரல்) கடித்தபடி இடக்கையில் பிடித்திருக்கும்அரிவாளை சுழற்றிக்கொண்டு சாலையிலேஆடிப்போனார். கருப்பு சேலை கட்டி, பம்பை பறை மேளங்கள்சூழ திருவலம் புற்று பூங்காவனத்து அம்மன் கோவிலில் தொடங்கிய ஆட்டம்பொன்னை ஆற்றுக்கு நகர்கிறது. சோர்ந்துபோன திருநங்கை வற்றிய ஆற்றிலே மயங்கி விழுந்தார். 37 வயதான ஐஸ்வர்யாஎன்னதான் சொந்தமாக டிராமா கம்பெனிவைத்து நடத்தி வந்தாலும், இது அவரது நாடகமல்ல. இந்த நாளின் இறுதியிலேஅரங்கேற அவரது நாடகம் இன்னும் காத்திருக்கிறது.
இது தமிழ்நாட்டின்வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவலத்தில் வசிக்கும்தலித் மக்களால் ஆண்டுதோறும்தமிழ் மாதமான மாசி (மார்ச்) அமாவாசையில் கொண்டாடப்படும் மயானக் கொள்ளை திருவிழா. தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினராக வகைபடுத்தப்பட்டுள்ளசக்கிலியர் சமூகத்தைச் சேர்ந்தஐஸ்வர்யா, கடந்த இருபது ஆண்டுகளாகஇக்கோயில் திருவிழாவில் பங்கேற்றுவருகிறார்.
"அவ்ளோ ஆவேசமாஆடுனதுநா இல்ல, எனக்கு அது எதுவுமேசுயநினைவுல இல்ல. அம்மன் தான் என் மேல வந்து ஆடுச்சு," என்று கூறுகிறார். காளியின்வடிவமாக சொல்லப்படும் அம்மன், அவருடைய சமூகம் வழிபடும் நாட்டுப்புறதெய்வமாகும். விழா சடங்குகள்எல்லாம் முடிந்ததும், இறுதியாககலை நிகழ்ச்சி இரவு 10 மணிக்குத் தொடங்கும்.
இரவில் சூழ்நிலை மாறியிருந்தது. தெருக்களுக்கு நடுவில் சிறிது உயரத்தில் அமைக்கப்பட்ட 10 x 12 அடி மேடையில் ஐஸ்வர்யாதிடமாக நடந்து செல்லும்போதுஅவர் மீண்டும் தெம்பு பெற்றது போல தெரிந்தார். இரண்டு 500 வாட்ஸ் விளக்குகளைபொருத்துவதற்கான இடத்தையும் பேனரை கட்ட வேண்டியஇடத்தையும் விழா ஏற்பாட்டாளர்களுக்கு அடையாளம்காட்டிக்கொண்டு இருந்தார். "அந்த ரெண்டயும் இந்த பக்கமா கொஞ்சம்சாய்வா மாட்டுங்க,” என்று கட்டளையிட்டார். அவர்தான்இங்கு மேடை மேலாளர், ஆடை வடிவமைப்பாளர், ஒளி வடிவமைப்பாளர், இயக்குநர், நாடக ஆசிரியர் மற்றும்நாடகக் குழுவின் தலைவர். இப்படி எல்லாமாகவும்டிராமா கம்பெனியை நடத்தும்‘One Woman Army’தான் ஐஸ்வர்யா. மேடையில்கட்டப்பட்டுள்ள திரைச்சேலையில் “அசோக் நாடக மன்றம்” என்ற பெயர் தடித்த எழுத்துக்களில்வரையப்பட்டிருந்தது.



