மணிப்பூர் வைஷ்ணவர்களின் எந்த பொது விருந்திலும பாமன் அல்லது புனித சமையல்காரர் (இங்குள்ள படத்தில் இடம்பெற்றுள்ளது) இடம்பெறுகிறார். மணிப்பூர் வைஷ்ணவர்கள் வங்காளத்தின் பாரம்பரிய இயற்கை சார்ந்த நம்பிக்கைகள், தாக்கங்களை கொண்ட தனித்துவமான கலவையாகும்.
திருமணம், பிறப்பு, இறப்பின் போது பிராமண பூசாரிகள் சடங்குகளைச் செய்யும்போது, அதற்கான கூட்டங்கள் அல்லது விருந்துகளின் போது உணவு, பிரசாதங்கள் பிராமண சமையல்காரர்களால் செய்யப்படுகிறது. நிகழ்வில் பங்கேற்கும அனைவருக்கும் உணவை அவர்கள் சமைத்து பரிமாறுகிறார்கள்.


