“என் தாய் சாலுபாய் ஆதிக்க சாதியினர் சிலரின் வீடுகளில் வேலை பார்த்தார். அவருடன் அடிக்கடி நான் செல்வேன்,” என்கிறார் கங்காதர். “வருடந்தோறும் ஓரிரு முரை நானும் சில பெண்களும் இதை செய்வோம். கூட்டிப் பெருக்கி, தொழுவத்தையும் வீட்டையும் முற்றத்தையும் சுத்தப்படுத்தி, மண்ணை மாட்டுச்சாண நீர் தெளித்து சுத்தமாக்குவோம். வீட்டின் பெண் உரிமையாளர் ஒரு பானை பருப்பு அல்லது கடலை மாவை முன்னால் வைப்பார்கள். 10-15 பாக்ரி ரொட்டியை அவர் தூக்கிப் போட, புடவையில் அவற்றை என் தாய் பிடித்துக் கொள்ள வேண்டும். தொட்டு விடாமல் இருப்பதை உரிமையாளர் உறுதி செய்வார்.”
சாதிவாரி உழைப்பை நிர்ணயிக்கும் பலுதெதாரி அமைப்பி, இந்த வேலையை மாங்க் சமூகத்தினர் செய்ய வேண்டும். இதோடு அவர்கள் மூங்கில் விளக்குமாறுகள், தானியக் கூடைகள் ஆகியவற்றை செய்து கொடுத்து உணவையும் தானியங்களையும் பெற்றுக் கொள்வார்கள்.
காலஞ்சென்ற கங்காதரின் தந்தை, மது தயாரித்து கொஞ்சம் வருமானம் ஈட்டினார். “ஒருநாள் காவலர்கள் வந்து அவரை கைது செய்தனர். நீண்ட முடியை கட்டாயப்படுத்தி வெட்ட வைத்தனர். போத்ராஜ்கள் நீண்ட முடி வைத்திருக்க வேண்டும். மது தயாரிப்பை நிறுத்த அவருக்கு கொத்தவால் வேலையை கொடுத்தனர்.”
70-களிலும் 80-களிலும் பலுதேதரி அமைப்பு, புதிய அமைப்புகளுக்கு வழி விட்டது. கொத்தவால் ஓர் உதாரணம். ஒருவகையில் அவர் ஊரின் வேலையாளாக இருப்பார். பலுதேதரி அமைப்பின்படி மகர்களும் மாங்க் மக்களும் மொத்த ஊருக்கு வேலை பார்க்க வேண்டும். கொத்தவாலுக்கு என குறைவான அளவில் ஒரு ஊதியம் கொடுக்கப்பட்டது. அரசுக்கும் ஊர்க்கார்களுக்கும் இணைப்பு பணியாளராக அவர் மாறினார். அரசு நியமித்த வேலைக்காரர் என சொல்லலாம். கங்காதரின் தந்தைக்கு இந்த வேலையுடன் கொஞ்சம் அந்தஸ்தும் கிடைத்தது. ‘ஒரு படி மேலே போக முடிந்ததில்’ குழந்தைகளை அவர் பள்ளிக்கு அனுப்பினார்.
கங்காதர், அண்ணன், ஐந்து சகோதரிகள் என அனைவரும் பள்ளிப் படிப்பை தொடங்கினர். சகோதரிகள் 3 அல்லது 4ம் வகுப்பு வரை படித்தனர். ஆண்கள் 10ம் வகுப்பு வரை படித்தனர். மாங்க் சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட சாதிய சுமைகளை அவர்கள்
கங்காதருக்கு எப்போதும் பாடப் பிடிக்கும். தாய் மற்றும் சகோதரிகளிடமிருந்து பாடும் திறன் வந்ததாக நினைக்கிறார் அவர். அவர்கள் அனைவரும் பல தெய்வங்களை வணங்கி, விரதம் உள்ளிட்ட பல சடங்குகளை பல நாட்களுக்கு பல தெய்வங்களுக்கு கடைபிடித்தனர். உண்மையில் பல பெண்கள் விரதம் இருந்து உணவை சேமித்தனர். “என் தாயும் சகோதரிகளும் ஜிந்தூரை சேர்ந்த (பர்பானியிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது) துறவியை பின்பற்றுகின்றனர். சீடர்களுடன் பல இடங்களுக்கு சுற்றி திரிந்தவர் அவர். பிறப்பால் மகரான அவர், பெளத்தத்தை தழுவவில்லை. துர்பதா மாயிக்காக அவர் ஞாயிற்றுக்கிழமையும் மகாதேவுக்காக திங்கட்கிழமையும் க்ருஷ்ணாவுக்காக புதன்கிழமையும் அவர்கள் விரதம் இருந்தனர்.