மோனாவின் (இந்த பெயரை பயன்படுத்தவே அவர் விரும்புகிறார்) கண்கள் மூடியிருக்கின்றன. ஒரு பக்கம், அவர் சூடான இரும்புத் தடியை பிடித்திருக்கிறார். இன்னொரு கையில் மூங்கில் குழல் வைத்திருக்கிறார். புகை அறையை நிறைக்கிறது. அவரின் கண்கள் இன்னும் மூடியிருக்கின்றன. தடி கொண்டு குழலில் ஒரு துளை இடுகிறார். பிறகு இன்னொரு துளை. அதற்குப் பிறகு இன்னொன்று. மொத்தம் ஆறு துளைகள்.
கண்களை திறந்து அவர், “பன்சூரி செய்ய திறமையும் நிறைய செய்ய வேகமும் வேண்டும்,” என்கிறார். பிறகு அவர் சிரித்து, “ஆண்கள் இதை செய்ய முடியாது. இது கடினமான வேலை!”
மூன்றாம் தலைமுறையாக பன்சூரி செய்யும் வேலை செய்கிறார். “பன்சூரி என்பது நுட்பமான கருவி,” என்கிறார் 35 வயது ஆகும் அவர். “துளைகள் இல்லையெனில் இது வெறும் மூங்கில் குச்சிதான். ஆனால் சரியாக துளையிட்டால், இதில் அற்புதமான பாடல்கள் வெளிப்படும். கண்ணனின் அடையாளம் இது.”
பூசப்படாத அறைக்கு நடுவே கரி அடுப்பருகே அவர் அமர்ந்திருந்தார். கூரையில் இருக்கும் ஒரே ஜன்னல் வழியாகத்தான் சூரிய வெளிச்சம் உள்ளே வருகிறது. வெளியே வானத்தில் பட்டங்கள் பறந்து கொண்டிருக்கின்றன.













