“ நல்ல கட்டைடா இந்த கோமல்” “அவ எப்படி இருக்கா பாரு” என்று ஆண்கள் கத்துகிறார்கள். பாலியல் கெட்ட வார்த்தைகளை, பெண்களின் உடல் உறுப்புகளை இழிவாகக் குறிப்பிடுகிற கெட்டவார்த்தைகளைச் சொல்லி ஆண்கள் கத்துகிறார்கள். மேடையில் ஆடுகிற 15 வயதான கோமல் என்கிற பெண்ணைத்தான் ஆண்கள் அவளுடைய தோற்றத்தை வைத்தும் உடல் நிறத்தை வைத்தும் சீண்டுவார்கள். “மேடையின் முன்னே இருக்கும் ஆண்களில் சிலர் எனது கவனத்தை ஈர்ப்பதற்காக போட்டி போடுவார்கள். அவர்களில் ஒருவரை நான் பார்த்தால் அவரது நண்பர் ஏமாற்றத்தில் கத்துவார். அவனைப் பார்க்காதே. அவனுக்கு பெண் நண்பர் இருக்கிறார். என்னைப் பார் என்று கத்துவார்” என்கிறார் கோமால்.
மங்களா பான்சோடே மற்றும் நிடின்குமார் தமாஷா மண்டல் ஆகியவை தமாஷா என்று மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் அழைக்கப்படும் நடனத்தை கிராமங்களில் நடத்துகிற நடனக் குழுக்கள். அந்த குழுக்களைச் சேர்ந்த பெண் நாட்டியக் கலைஞர்கள் அவர்களில் யாரைப்பார்த்து அதிகமானவர்கள் பாராட்டுகிறார்கள், கவரப்படுகிறார்கள் என்பதில் போட்டி போடுவார்கள். சத்தமாக விசிலடிக்குமாறும் சத்தமாக கேலி செய்யுமாறும் அவர்கள் ஆண்களை வேகப்படுத்துவார்கள் என்கிறார் 18 வயதான காஜல் ஷிண்டே. “ என்னா சாப்பிடலையா, உடம்புக்கு நலம் இல்லையா” என்றும் அவர்கள் கேலியும் கிண்டலும் செய்வார்கள். “எங்களுக்கு கேட்கவில்லை” என்று அவர்கள் தங்களின் காதுகளைக் காட்டிச் சொல்வார்கள்.
கோமல் மாதிரியே காஜல் ஒரு முன்னணி நாட்டியக் கலைஞர். அவர்கள் இரண்டு பேரும் தமாஷா நாட்டியத்தின் மூத்த கலைஞர் மங்களா பான்சோடேவின் தலைமையில் இயங்குகிற நடனக் குழுவில் வேலை செய்கிறார்கள். அந்தக் குழுவில் அவர்களோடு கலைஞர்களும் தொழிலாளர்களுமாக சுமார் 150 பேர் இருக்கிறார்கள். மகாராஷ்டிராவின் கிராமப்புறங்களில் இன்னும் பிரபலமாக இருக்கின்ற ஒரு கிராமத்து கலைதான் தமாஷா. நடன நிகழ்ச்சிகளை இந்த நடனக் குழுக்கள் கிராமம் கிராமமாக பயணம் செய்து நடத்துகின்றன. செப்டம்பர் முதல் மே மாதம் வரைக்குமான காலம்தான் இந்த நடனங்களை மக்கள் விரும்பி பார்ப்பதற்கான பருவகாலம். அந்தக் காலகட்டத்தில் ஏறத்தாழ தினமும் இந்தக் குழுக்கள் கிராமம் கிராமமாக போய்க்கொண்டே இருப்பார்கள். இந்த நடனக் காட்சிகள் இரவு 11 மணி அளவில் தொடங்கி அதிகாலை வரையில் நடைபெறும். தமாஷா நடனம் ஆரம்பிப்பதற்கு முன்னால் இரண்டு மணிநேரங்களுக்கு முன்பாக திறந்த வெளியில் போடப்படுகிற மேடையில் நடனம் நடைபெறும். மங்களாடாய் நாட்டியக் குழு என்பது மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு கொண்டிருக்கின்ற ஒரு நாட்டியக் குழு. டிக்கெட்டுகளை விற்பனை செய்வதற்கும் போதுமான ஆதாயம் கிடைப்பதற்கும் மற்ற நடனக்குழுக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். (பார்க்க: ‘Tamasha is like a jail that I want to stay in’மற்றும் Tamasha: transformed but still travelling)













