குருகிராமின் பஞ்சாரா சந்தையில் தனது கடையின் முன் நிற்கிறார் கன்சி ராம். அவருக்குப் பின்னால், மூங்கில், தார்பாய் போட்ட சிறிய கொட்டகையில் பல வகையான மரச்சாமான்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அவருடைய மனைவி ஆஷா அருகில் அமர்ந்துள்ளார். அவர் தலையில் ஈரத்துணியை போட்டுக் கொள்கிறார். டெல்லியின் கோடை காலங்களை மறக்க முடியாது. காலையிலேயே வெயில் கொளுத்துவதால் தலையில் போடும் ஈரத்துணி அவரை குளிர்ச்சியாக உணர வைக்கும் என்கிறார்.
கன்சி ராமோ, ஆஷோவோ வெயிலுக்கு புதியவர்கள் அல்ல. பாரம்பரிய இரும்பு கொல்லர்களான காடியா லோஹர் சமூகத்திற்கு நெருப்பை சார்ந்து தான் தொழிலே. “ஐசி கர்மி மெயின் கரம் கரம் லோஹி கோ பீட்டே தி…ஆஞ்ச் கே சாம்னே போத் மெஹ்னத் கி ஹை [இதுபோன்ற வெப்பநிலையில் தான் பழுத்த இரும்பை அடிக்க வேண்டும்…எரியும் தீயின் முன் கடினமாக உழைக்க வேண்டும்].”
ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட காடியா லோஹர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக (MBC) பட்டியலிடப்பட்டுள்ளனர். டெல்லியை சுற்றி சில இடங்களிலும் வசிக்கும் அவர்கள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக (OBCs) வகைப்படுத்தப்படுகின்றனர். அவர்கள் நிலமற்ற நாடோடிகள், பகுதி நாடோடிகளாக 98 சதவிகிதம் அறியப்படுகின்றனர். இந்தியாவில் மிக சொற்பமாக 11 சதவிகித நாடோடி சமூகங்கள் பொதுநிலத்தில் வாழ்கின்றன. மாட்டு வண்டிகளில் (காடியா) வாழ்ந்து பயணிக்கும் பல காடியா லோஹர்களுக்கு அதுவே நகரும் வீடுகளாகவும், பணியிடமாகவும் திகழுகிறது.
கன்சி ராம் பல ஆண்டுகளாக, கடும் கோடை, குளிர் காலங்களில்கூட வீடு வீடாக சென்று, தான் செய்த இரும்புக் கருவிகள், பாத்திரங்கள், பிற உபகரணங்களை விற்பனை செய்து வந்தார்.
ஆனால் இரு தசாப்தங்களாக தலைநகர் டெல்லியில் நிலவும் கடும் வெப்பநிலையால் அவர் வெளியே செல்வதை நிறுத்திவிட்டார். “இதுபோன்ற அதீத வெப்பத்தில் வீடு வீடாக செல்வது அர்த்தமற்றது. அதனால் தான் அந்த வேலையை விட்டுவிட்டு இங்கு கடையை தொடங்கினேன்,” என்று அவர் பாரியிடம் கூறுகிறார்.












