ஆர். நல்லகண்ணு 1925 - 2026
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்று இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் கடைசி நாயகர்களில் ஒருவரான ஆர். நல்லகண்ணு பிப்ரவரி 25 அன்று மறைந்தார். அவரின் வயது 101. தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களில் நிச்சயமாக அவர் கடைசி. பிரிட்டிஷாரை எதிர்த்து போராடிய வீரர்கள் பற்றிய இறுதி நாயகர்கள்: இந்திய சுதந்திரத்தின் முன்னணி வீரர்கள் என்கிற என் புத்தகத்தில் அவரும் இடம்பெற்றிருக்கிறார்.
2022ம் ஆண்டில் சுதந்திர தினத்தன்று, தமிழ்நாடு அரசு அவருக்கு மாநிலத்தின் உயரிய விருதான தகைசால் தமிழர் விருதை கொடுத்தது. 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் கொண்ட விருது அது. ஆனால் தோழர் ஆர்என்கே என பரவலாக அறியப்படும் அவர், விருதை ஏற்றுக்கொண்டு, மேலதிகமாக 5,000 ரூபாய் சொந்த பணத்தையும் சேர்த்து ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துவிட்டார். தமிழ்நாட்டின் விவசாயிகள் போராட்ட இயக்கத்தை தோற்றுவித்தர்களில் ஒருவரான இவரின் மறைவு, ஒரு சகாப்தத்தின் நிறைவு.













