“ஆ….!” ஒரே நேரத்தில் ஏமாற்றம் மற்றும் ஆட்சேபம் ஆகியவற்றுக்கான குரல் எழும்பி, பிறகு சிரிப்பு சத்தம் தொடர்கிறது. வட்டமாக அமர்ந்திருக்கும் ஐந்து பேரின் சத்தம் சந்தின் அமைதியை குலைக்கிறது. நான்கு புளியங்கொட்டைகளும் நான்கு திசைகளில் விழுந்து கிடந்தன. அவற்றை பகடை போல உருட்ட முடியாது. அல்மானா முன்னால் வந்து விளக்குகிறார். கவனமாக நம்மை பார்க்க சொல்லிவிட்டு, அவர் கொட்டைகளை சேகரித்து, மணிக்கட்டை ஒரு ஸ்பின் பவுலர் போல சுழற்றி போட்டார்.
இம்முறை கொட்டைகள் வேறு ஒரு கோணத்தில் விழுந்தன. அவற்றுக்கேற்ப ஹலம்மா, உடைந்த வளையல் துண்டு காய்களை நகர்த்துகிறார். "ஒரு கொட்டை மேலே பார்த்து விழுந்திருந்தால், ஒரு கட்டம் நகர்த்த வேண்டும். இரண்டு விழுந்திருந்தால், இரண்டு கட்டங்கள் நகர்த்த வேண்டும்," என்கிறார் அவர். இன்னொரு இருவருக்கும் அவர் விளையாட்டை குறித்து விளக்குகிறார். எங்களின் காயை அவர் நகர்த்திவிட்டு மீண்டும் லாவகமாக கொட்டைகளை வீசுகிறார். இது அவரின் முறை.





