"நான் 'ஷோலே' தாக்கூர் போன்றவன்."
பிரபலபாலிவுட் திரைப்படமான 'ஷோலே'யில் சஞ்சீவ் குமார் கதாபாத்திரத்துடன் தன்னை ஒப்பிட்டு மகிழ்கிறார் ரவீந்திர ஷிண்டே. அவரது முகத்தில் தெரியும் குறும்புத்தனமான புன்னகை அதை வெளிப்படுத்துகிறது. "ஆனால் நான் அவரை விட அதிர்ஷ்டசாலிதான். அவருக்கு இரண்டுகைகளும் போய்விட்டன," என்று ஒரு கணம் சிந்தித்துகூறுகிறார்.
இத்தகையசூழலில் பலரும் தங்கள் வாழ்க்கையைப் பற்றி நகைச்சுவையாகப் பேசுவதைத் தவிர்த்து, வாழ்வதற்கான மன உறுதியையே இழந்திருப்பர். ஆனால் 47 வயது ஷிண்டே, இக்கட்டான அந்த சூழலையும் நகைச்சுவையோடு கையாளுகிறார்.
மகாராஷ்டிராவின்யவத்மால் மாவட்டத்தில் உள்ள உம்ரி கிராமத்தில் 16 ஏக்கர் நிலம் வைத்துள்ள இவர், தனது பதின்ம வயதிலிருந்தே விவசாயப் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். துரதிர்ஷ்டவசமாக, அவர் விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்த அதே காலகட்டத்தில்தான், பல தசாப்தங்களாகத்தொடரும் விவசாய நெருக்கடியும் தொடங்கியது.
விவசாய வருமானத்தைக் கொண்டே, அவரது தந்தை குடும்பத்தை நிர்வகித்து வந்தார். ஆனால் ஷிண்டேவுக்குத் திருமணமாகி குழந்தைகள் பிறந்த நேரத்தில் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. விலைவாசி உயர்வு, பயிர்களுக்கான விலை சரிவு மற்றும் நீண்ட கால வறட்சி போன்ற தீவிர காலநிலை மாற்றங்கள், விவசாயக் கடன்கள் பெருகக் காரணமாகின.
மகாராஷ்டிராவில்ஒரு விவசாயக் குடும்பத்தின் மாதவருமானம் வெறும் 11,492 ரூபாயாக மட்டுமே உள்ளது. இந்த நெருக்கடியின் தாக்கம் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்களிலும் எதிரொலிக்கிறது. 2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் 10,546 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதாவது, நாளொன்றுக்கு 29 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. களத்தில் தரவுகளைச் சேகரிக்கும்போது பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் பெரும்பாலும் விடுபட்டுவிடுவதால், இந்தப்புள்ளிவிவரம் உண்மையான எண்ணிக்கையை விட மிகக் குறைவாகவேகாட்டப்படுகிறது. ஆவணங்களின்படி, அவர்கள் பயிரிடும் நிலம் பெரும்பாலும் அவர்கள் பெயரில் இல்லை என்பதால், அவர்களின் தற்கொலைகள் பெரும்பாலும் "விவசாயிகள் தற்கொலை" என்ற பிரிவில் சேர்க்கப்படுவதில்லை.
மொத்ததற்கொலைகளில், 36 சதவீதம், அதாவது 3,824 உயிரிழப்புகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் நிகழும் விவசாயிகளின் தற்கொலைகளில் பெரும்பகுதி விதர்பாவில் காணப்படுகிறது. ஷிண்டேவின் கிராமமும் விவசாய நெருக்கடியின் சவால்களை எதிர்கொண்டு வரும் விதர்பாவின் ஒரு பகுதி தான்.
ஆனால், தனது வாழ்க்கை இன்னும் கடினமானதாக மாறப்போகிறது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.














