முதல் பச்சை இலை, மசூதிக்கு அருகே இருக்கும் தன் ஓரறை வீட்டின் சுவரில் தோன்றியதும் அமீனா புன்னகைத்தார். அதை பறிக்க அவருக்கு மனமில்லை. கொஞ்ச காலமாக அவர் வெளியே செல்வதில்லை. பெரும்பாலான நாட்களை அந்த அறையில் தனியே கழிக்கிறார். கருச்சிதைவிலிருந்து அவர் மீண்டுக் கொண்டிருக்கிறார். கொடுமைகளின் நிழலில் இருக்கும் அவருக்கு செல்வதற்கு வேறிடம் ஏதும் இல்லை. சிறிய, புதிய, பசிய இதய வடிவிலான இலை மட்டும்தான் அந்த நாட்களில் அவரருகே இருந்த மென்மையான ஒரே விஷயம்.
கிப்லாவின் பக்கமாக அது முளைத்தது யதேச்சையானதா அல்லது அர்த்தம் கொண்ட அடையாளமா? அவரால் முடிவுக்கு வர முடியவில்லை.
ஒரு மாதத்தில் சுவரிலிருந்து விரிசல் விரிவடைவதை அவர் கண்டார். செடியின் தண்டு தடியாகி ஓரடி நீளம் பெற்று, மெல்லிய கிளைகளில் சில இலைகளுடன் நிற்கிறது. அதனால் அவருக்கு பிரச்சினை இல்லை. மீண்டும் அமைதியில் இருந்தார். கலவரம் நின்றுவிட்டது. பழைய ராகம் தெருக்களுக்கு திரும்பி விட்டது. பூத்தையல் வீட்டில் இருந்து போடத் தொடங்கி விட்டார். வீட்டில் வேலை பார்க்கும்போது, அவரது துயரத்தை யாரோ பார்த்துக் கொண்டிருப்பதை போல, தனக்குத் தானே பேசிக் கொள்வார்.
சுவருக்கு வெளியே அரச மரம் பெரிதாகி, பிறரின் இடங்களை நோக்கி வளர்ந்து கொண்டிருப்பதை அவர் தெரிந்திருக்கவில்லை. மற்றவர்களுடன் அவர் அதிகம் பேசியதில்லை. சில புனித கற்களை சுவருக்கு பின்னால் யாரோ வைத்ததோ, அதனால் சில அதிசயங்கள் நேர்ந்ததோ, தொடர்ந்து அதற்கு ஒரு கட்டுமானம் கட்ட வேண்டுமென மக்கள் யோசித்ததோ எதுவும் அவருக்கு தெரியாது. அவருக்கு பின்னால் இருந்து அரசமரம் ரகசிய திட்டமிட்டது போல இருந்தது. தெய்வீகத்தன்மையை பிடுங்கியெறிய முடியாது. அதை சுற்றி பல கதைகளும் இருக்கிறது. இந்த இடத்தில் இருக்கும் இந்த குறிப்பிட்ட மரம் எப்படி விஷ்ணுவின் பீடமானது என்பது எவருக்கும் தெரியவில்லை. விஷ்ணுவா, பிரம்மாவா என்றும் தெரியவில்லை? நோட்டீஸை படிக்கும்போது தன்னுடைய அறியாமை பற்றித்தான் அவர் யோசித்தார்.


