தலித் டீம் பெற்ற வெற்றி, சாதி வன்முறைக்கு போதுமானதா இருந்தது. எக்ஸாம் எழுதப் போனபோது பஸ்ஸை நிறுத்தி தேவேந்திரராஜை தரதரன்னு இழுத்து வெளியே போட்டு வெட்டி இருக்காங்க. அவரோட அப்பா இதை சொன்னதும் என் உடம்பு நடுங்கிடுச்சு. வன்முறை விளையாட்டால வரலஒ, அதிகாரத்தால வந்துச்சு. ஆதிக்க சாதி பசங்கள தலித் பையன் ஜெயிக்கக் கூடாதுங்கற எண்ணம்தான் இந்த வன்முறைக்கு காரணம். ஆனா, அந்தப் பகுதியிலேயே நல்லா கபடி விளாடறவரா இருந்தவரு தேவேந்திரராஜ்.
டாக்டர் சொல்லும்போது, தலையிலயும் கையிலயும் அதிகமான வெட்டு இருக்கு. கையில ஒரு பயங்கரமான வெட்டு விழுந்து இருக்குன்னு சொன்னாரு. கை விரல் எல்லாம் வெட்டுப்பட்டதால, அதுக்கு ரெண்டு மூணு மாசம் ஆகலாம்னு சொல்றாங்க. “விரல் எல்லாம் சேர்த்து செட் ஆகி, அதுக்கு அப்புறம் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணனும்,” என டாக்டர் சொன்னாரு.
தேவேந்திரராஜன் தான் மூத்த பையன். “நான் செங்கல் சூளைல வேலை பார்க்கறேன். ரெண்டு குழந்தைங்க. தேவேந்திரராஜ்தான் மூத்தவன். பாளையங்கோட்டை ஸ்கூல்ல படிக்கிறான். ரெண்டாவது மகள். மனைவியும் நானும் தினமும் சூளைக்கு போவோம்,” என்கிறார் தங்க கணேஷ்.
சொந்த வாழ்க்கையை பத்தி பேசத் தொடங்கனாரு: “சாதி பற்றியான புரிதல் எனக்கு சின்ன வயசுல இருந்தது கிடையாது. ஸ்கூல் படிக்கும்போது கூட அம்பேத்கர் பற்றியும் பெரியாரைப் பற்றியும் டீச்சர் யாரும் சொல்லி நாங்கள் கேட்டதே கிடையாது. அப்பொழுது 10வது எக்ஸாம் முடிச்ச பிறகு ஐடிஐக்கு அப்ளை செஞ்சு எனக்கு அட்மிஷன் கார்டு கிடைத்தது. 650 ரூபாய் பீஸ். அந்த 650 ரூபாய் ரெடி பண்றதுக்கு அவ்வளவு கஷ்டமா இருந்துச்சி. ரெண்டு மூணு பேர் கிட்ட அம்மா தான் கடன் வாங்கி ரெடி பண்ணாங்க.
“650 ரூபாயை கையில் எடுத்துக்கிட்டு மிகப்பெரிய கனவோட மோட்டர் மெக்கானிக் ஆகிடுவேன்னு சொல்லிட்டு ஒரு பயங்கரமான ஒரு பேராசைல அங்க எல்லாருடைய சேர்ந்து வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அங்கிருந்த ஆபீஸருங்க வந்து ரெண்டு மூணு பேர மட்டும் கூப்பிட்டுட்டு மத்தவங்களுக்கு சீட்டு இல்லைனு சொல்லிட்டு போயிட்டாங்க. எங்கள வெளியே அனுப்பிட்டு கேட்டை பூட்டு போட்டுக் லாக் பண்ணிட்டாங்க. எனக்கு என்ன பண்றதுனே தெரியல. பயங்கரமான அழுகை வந்தது. நிறைய அழுதேன். மத்தவங்க கிட்ட போய் காரணம் கேட்கும் போது உங்களுக்கு மார்க் கம்மின்னு சொன்னாங்க. மார்க் கம்மினா அட்மிஷன் கார்டு ஏன் வந்துச்சுன்னு ஒரு கேள்வி எனக்கு இன்ன வரைக்கும் இருக்கு.”