தமிழில்: சவிதா
T


South Goa, Goa
|THU, MAY 22, 2025
கோவாவின் பெண் பதேல்கள்
மார்கோவில் பெருமையோடு, கடினமாக உழைக்கும் பெண் சுமை தூக்கிகள் அருகி வருகின்றனர்
Author
Translator

Sonia Filinto
தெற்கு கோவாவின் மார்கோ நகரில் பெரும்பாலும் பதேல்களாக (‘பதேல்’ என்றால் கொங்கனியில் ‘சுமை தூக்கி‘) பெண்களே அதிகம் வேலை செய்கின்றனர். இத்தொழில் பரம்பரை, பரம்பரையாக மகள்கள் அல்லது மருமகள்களிடம் பெண்களால் ஒப்படைக்கப்பட்டது

Sonia Filinto
ஆனால் இப்போதுள்ள இளம் தலைமுறை பெண்கள் சுமை தூக்கிகளாக ஆகவில்லை. “இந்த வேலையில் எங்கள் மகள்களுக்கு ஆர்வமில்லை. கொஞ்சம் படித்துவிட்டு அலுவலக வேலைகளுக்கு செல்கின்றனர்,” என்கிறார் மரியா போர்கஸ். மார்கோ சந்தையில் இப்போது சுமார் ஒரு டஜன் பதேல்களே உள்ளனர். அவர்களுக்கும் வயது 50-ஐ கடந்திருக்கும். கோவா சந்தைகளில் பதேல்கள் நீண்ட வரலாறு கொண்டிருப்பதை உறுதிப்படுத்த வரையறுக்கப்பட்ட பதிவுகள் உள்ளன. குறிப்பாக நாட்டுப்புற பாடல்களில் குறிப்புகள் உள்ளன

Sonia Filinto
போர்டா, ஃபதோர்டா போன்ற கிராமங்கள், சிறு நகரங்களில் இருந்து மார்கோ நகருக்கு பெண்கள் தினமும் பேருந்தில் வந்து செல்கின்றனர். தங்களது அன்றாட வீட்டு வேலைகளை முடித்துவிட்டு காலை 8 முதல் 10 மணிக்குள் சந்தைக்கு வந்துவிடுகின்றனர். மாலை 6.30 மணிக்கு அவர்கள் வீடு திரும்புகின்றனர்

Sonia Filinto
மார்கோ பதேல்கள் பாரம்பரியமாக ரோமானிய கத்தோலிக்கத்தைச் சேர்ந்தவர்கள். கோவாவின் பூர்வ குடிகளான குன்பிஸ் பழங்குடியினராக அவர்கள் கருதப்படுகின்றனர். பாரம்பரிய குன்பி முறையில் சேலை கட்டியுள்ள எல்பைன் அல்மெய்தா. அவர்களின் பாரம்பரிய உடையும், நிறமும் இப்போது உற்பத்தி செய்யப்படுவதில்லை

Sonia Filinto
மார்கோ சந்தையின் பழமையான கடைகள் இருக்கும் சந்தில் பதேல் பெண்கள் பொதுவாக ஒன்று கூடுகின்றனர். இது கிறிஸ்தவர்களின் தவக்காலம் என்பதால் சிக்கனத்தை கடைப்பிடித்து ஷாப்பிங் செய்வதை தவிர்ப்பர் என்பதால் வணிகம் பாதிக்கப்பட்டாலும், இப்பெண்களுக்கு சிறிது ஓய்வு கிடைக்கிறது

Sonia Filinto
1990களின் பிந்தைய காலத்தில் கொங்கன் இரயில்வே அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, அண்டை மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்களின் வருகையால் இங்குள்ள பெண்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. குறைவான கூலியில் வேலை செய்யும் திடகாத்திரமான ஆண்கள் இப்பெண்களுக்கு கடும் போட்டியாகி அவர்களின் வேலை வாய்ப்புகளையும் பறித்தனர். ஆனால் உள்ளூர் வியாபாரிகள் பதேல் பெண்களின் நேர்மையை மிகவும் நம்புகின்றனர். அவர்களை நம்பி கடைகளை திறந்து வைத்துச் செல்கின்றனர், பெரும் தொகையை கூட அவர்களிடம் கொடுத்து வங்கியில் செலுத்த அனுப்புகின்றனர்

Sonia Filinto
பதேல்கள் ஒரு நாளுக்கு ரூ. 50 முதல் ரூ. 200 வரை சம்பாதிக்கின்றர். 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஒரு நடுத்தர அளவிலான ஷாப்பிங் பையை எடுத்துச் சென்றால் ரூ.3ம் ஒரு ஸ்டீல் அலமாரியை எடுத்துச் செல்ல ரூ.50ம் கிடைக்கும். அதில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கையால் வகுத்தால் 50 கிலோ பொருட்களை எடுத்துச் சென்றால் அவர்களுக்கு ரூ.20 கிடைக்கும்

Sonia Filinto
பல்வேறு பொருட்கள், அதிக பாரங்களை சுமந்து வர கடை உரிமையாளர்களும், வாடிக்கையாளர்களும் பதேல்களின் சேவையை பயன்படுத்திக் கொள்கின்றனர். வீட்டு தேவைக்காக வாராந்திர ஷாப்பிங் வந்துள்ள உள்ளூர் வியாபாரிக்காக கூடை நிறைய மளிகைப் பொருட்களை சுமந்து செல்லும் எல்பைன் அல்மெய்தா

Sonia Filinto
மதியம் 1 முதல் மாலை 3.30 மணி வரை கோவாவில் கடைகள் மூடப்படுகின்றன. மூடப்பட்ட கடை வாசல்களை, அப்பெண்கள் மதிய உணவு உண்ணும் இடமாக மாற்றுகின்றனர்

Sonia Filinto
பதேல் சமூக பூனைக்கு தினசரி உணவு கிடைக்கிறது

Sonia Filinto
அத்தியாவசிய மதிய நேர உறக்கம்

Sonia Filinto
பதேல்களில் மிகவும் வயது மிகுந்தவர் ரீடா கமாரா. அவருக்கு சுமார் 70 வயது இருக்கும். அவர் தனது தினசரி புகையிலை பீடியை பற்ற வைத்து இழுக்கிறார்

Sonia Filinto
பார்வை திறன் அதிகரிக்க சில பதேல்கள் கண்ணாடி அணிந்துள்ளனர், ஆனால் வேலையின் போது அணிவது அசவுகரியத்தை அளிப்பதாக சொல்கின்றனர். “வேலையோடு கண்ணாடியும் வந்துவிட்டது,” என்கிறார் பாலின் அல்மெய்தா. அவர் வேலை முடிந்து வீடு திரும்பும்போது மட்டும் கண்ணாடி அணிந்து கொள்கிறார்

Sonia Filinto
2011ஆம் ஆண்டில், போர்த்துகீசிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற 50 ஆண்டுகளை நினைவுகூரும் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, கோவா அரசு 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய பதேல்களின் சேவைகளை அங்கீகரித்தது. அவர்களுக்கு ஒரு முறை மதிப்பூதியமாக ரூ.25,000 வழங்கப்பட்டது. மூத்த குடிமக்களுக்கான அரசின் ஓய்வூதியத் திட்டங்களுக்கு இப்பெண்கள் விண்ணப்பிக்க முடியும் என்றாலும், இதுவரை உதவி பெற விரும்பாத பெருமைக்குரிய தொழிலாளர்கள் பதேல்கள்
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
Donate to PARI
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/bhadels-of-goa-ta

