”ஒவி செய்யுள்களில் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்.”
இதை சொல்லும்போது எண்பது வயதுகளின் பிற்பகுதியில் ஆஷாதய் இருந்தார். கீழே விழுந்து அடிபட்டதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்த அவர், மடிக்கணிணி பயன்படுத்த சிரமப்பட்டார். எனவே கையால் எழுதப்படும் மொழிபெயர்ப்பு முறைக்கு நாங்கள் மாறினோம். 80-லிருந்து 100 செய்யுள்களை கொண்ட பிரிண்ட் அவுட்டில் அவர் எழுதுவார். அது முடிந்ததும் அடுத்ததில் மொழிபெயர்ப்பார்.
அவருடன் இப்பணியில் ஜிதேந்திர மெய்த் வேலை பார்த்து, செய்யுள்களை தரவுதொகுப்பில் பதிவேற்றினார்.
“ஒரு நூலகர் என்பவர், புத்தகங்களை பராமரிக்கும் நபர் என்பதுதான் கல்லூரி நாட்கள் வரை என்னுடைய புரிதலாக இருந்தது. ஆனால் 1996-ல், ஆஷாதய் ஓகலேவை ஹேமாதய் ரயிர்கரின் வீட்டில் சந்தித்தபோது, இந்த (குறுகிய) புரிதல் மறைந்தது,” என்கிறார் ஜிதேந்திர மெய்த். ஆஷாதய்யுடன் இணைந்து முப்பது வருடங்களாக அரவைக்கல் பாடல்களை மொழிபெயர்க்கும் பணியில் அவர் இயங்கினார். 1996ம் ஆண்டு தொடங்கி ஆஷாதய்யின் கடைசி நாட்கள் வரை.






