ஆறும் உங்களின் உள்ளங்கையில் அடங்கி விடும். கொஞ்சம் மிளகாய் மற்றும் உப்புடன் அரைத்தால், அற்புதமான உணவாகி விடும். எனவே ராம்பிரசாத்தும் அவரின் பதின்வயது நண்பர்களும் சேற்று நண்டுகளை ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் பிடித்து, விருந்துக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
ஆந்திராவின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்திலுள்ள பஞ்சாராஸின் மலகாவரிபள்ளி தண்டா வசிப்பிடத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக இருக்கும் மரங்களின் நிழலில் அவர்கள் அமருகின்றனர். ’பச்சை நண்டு’ என்றும் ‘சதுப்பு நில நண்டு’ என்றும் அழைக்கப்படும் அவர்களது விருந்தின் மையமான சேற்று நண்டு, இந்தியாவின் கிழக்கு கடற்கரையோரத்தில் காணப்படுகிறது.
அமதகூர் மண்டலத்தின் அமைதியான பகுதி பள்ளத்தாக்கில் அமைந்திருக்கிறது. நெல் வயல்கள், தக்காளி மற்றும் மிளகாய் செடிகள் மலையடிவாரத்தில் விளைந்திருக்கின்றன. பசுமையான நிலைமைக்கு மாறாக, ஆழ்துளைக் கிணறுகள் 800 முதல் 1,200 அடி ஆழம் வரை செல்வதாக சொல்கிறார்கள். ஒரு நாளில் நீர் பாசனம் எட்டு மணி நேரம்தான் இருக்கிறது.






