2023ம் ஆண்டில் கிராமப்புற இந்தியாவை சார்ந்த பல முக்கியமான காணொளிகள், ஆவணப்படங்கள், குறுங்காணொளிகள், திரைப்படங்கள் போன்றவற்றை பாரியின் திரைப்படப் பிரிவில் கிடைக்கப் பெற்றோம்.
இணைய வழி பத்திரிகையகா நாங்கள், நம்மை சுற்றி இருக்கும் நிகழ்வுகளையும் செய்திகளையும் ஆராயும் படங்கள் எடுக்கப்பட ஊக்குவிக்கிறோம். பிகாரில் மதவாதத்தால் எரிக்கப்பட்ட 113 வருடப் பழமையான மதராசாவைப் பற்றிய எங்களின் படம் மதவாதத்தின் விளைவுகளை ஆராய்கிறது. ஒரான் எனப்படும் புனிதத் தோப்புகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்காக கையகப்படுத்தப்படுவதை சுட்டிக் காட்டியிருக்கும் எங்களின் படம், இந்த புதர்க்காடுகளை ‘புறம்போக்கு’ நிலங்களாக வகைப்படுத்துவதை கேள்விக்குட்படுத்தியிருக்கிறது.
இந்த வருடத்தை நாங்கள் அசாமின் பிரம்மபுத்திராவில், வாழ்க்கை மற்றும் காதல் பற்றி பாடும் எருமை மேய்ப்பவரின் பாடலிலிருந்து தொடங்கினோம். வருடம் முழுக்க, நாங்கள் மேற்கு வங்கம், சட்டீஸ்கர், கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலிருந்து பாடல்களையும் நடனங்களையும் சேர்த்திருக்கிறோம்.
பல பத்தாண்டுகளாக நடந்து வந்த அற்புதமான பணியான பாரியின் க்ரைண்ட்மில் பாடல்கள் பற்றிய படத்துடன் இந்த வருடத்தை முடித்திருக்கிறோம்.
இந்த வருடம் ஒரு முக்கியமான படத்தையும் இணைத்தோம். புனேவில் குப்பை சேகரிக்கும் பெண்களின் குரல்களை கொண்ட மதிப்பு என்கிற படம். “குப்பைகளை உருவாக்குவதே நீங்கள்தான் என்றபோது, நாங்கள் எப்படி குப்பை பெண்கள் என அழைக்கப்படுவோம்?” என கேள்வி கேட்கிறார்கள். காலநிலை மாற்றத்தின் தாக்கம் பற்றிய அல்ஃபோன்சா மாம்பழ படம், அந்த பழங்களை விளைவிப்பவர்கள் சந்திக்கும் காலநிலை நெருக்கடியை பேசுகிறது.
சமூகத்தின் பல பிரிவுகள் குறித்த படங்களையும் வருடம் முழுக்க நாங்கள் தொடர்ந்து சேர்த்து வருகிறோம். மேடபுரத்தின் மடிகா சமூக மக்கள் கடைபிடிக்கும் புதிய தலித் பாரம்பரியத்தின் வண்ணம் மற்றும் ஒலி நிறைந்த உகாதி கொண்டாட்டத்தை இப்படம் காட்டுகிறது. மலபார் பகுதியின் பல சாதிகளும் சமூகங்களும் பங்கெடுக்கும் தோல்பாவைக்கூத்து சந்திக்கும் இடர்களை இப்படம் காட்டுகிறது. அண்டை மாநிலமான கர்நாடகாவின் துளு நாட்டில் நடைபெறும் பூத வழிபாட்டில் முக்கிய பங்காற்றும் நாதஸ்வர கலைஞரின் வாழ்க்கை விரிவாக விளக்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் அழிவை சந்தித்துக் கொண்டிருக்கும் மெழுகு வார்ப்பு கலையான தோக்ராவை இப்படம் விவரிக்கிறது.
இப்படங்களை பாருங்கள்!











