வாரங்கல்லின் மல்லு ஸ்வராஜ்யம் தலைமையிலான போராட்டக் குழுக்களின் உண்டிவில்களும் துப்பாக்கிகளும் நிஜாமின் ராணுவத்தை 1940களில் அச்சத்துக்குள்ளாக்கின. மார்ச் 2022-ல் இறப்பதற்கு முன் வரை, இந்த சுதந்திரப் போராட்ட வீரர் அநீதிக்கு எதிராகக் கிளர்ச்சியையே அறிவுறுத்தினார்