பாஷா சிங் தற்சார்புள்ள பத்திரிகையாளர், எழுத்தாளர். மலமள்ளும் துப்புரவு தொழிலாளர்கள் குறித்த அவருடைய ‘Adrishya Bharat’ நூல் இந்தியில் (2012) வெளிவந்தது. அதே நூல் ‘Unseen’ என்கிற தலைப்பில் 2014-ல் ஆங்கிலத்தில் பென்குயின் வெளியீடாக வெளிவந்தது. பாஷா சிங்கின் இதழியல் வட இந்தியாவில் விவசாய துயரங்கள், அணு உலைகளின் அரசியல், கள உண்மைகள், தலித், பாலின, சிறுபான்மை உரிமைகள் சார்ந்து செயல்படுகிறது.