”கோடையில் நான் ஒரு வாசுதேவ்(பாணர்); குளிர்காலம் வந்துவிட்டால் விவசாயி..” எனும் பிவா மகாதேவ் காலேவுக்கு வயது 70. வாசுதேவ் சமூகத்தினர் மகாராஷ்டிரத்தில் குறிப்பாக கண்ணனை வழிபடும் ஒரு பாணர் வகையினர் ஆவர். ஊர் ஊருக்குப் போய் நாட்டுப்புற தெய்வீகப் பாடல்களைப் பாடி இரந்து வருவாய் ஈட்டுவதும் இவர்களின் வாழ்க்கைமுறை ஆகும்.
நாசிக் மாவட்டம், பேந்த் வட்டம், இரெய்ட்டாலே கிராமத்திலிருந்து பிப்.20-21 விவசாயிகள் பேரணிக்கு வந்திருந்தார், பிவா. ஒரு வாசுதேவாக - அவர் குடும்பத்தின் மரபுத் தொழிலாக- பேந்த் வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு நடையாகவே சென்றுவருகிறார். அத்துடன், செப்டம்பர் முதல் பிப்பரவரிவரை தன் கிராமத்தில் விவசாய வேலைகளில் இறங்கிவிடுகிறார்.
கடந்த வாரப் பேரணியின்போது நிறைய விவசாயிகள் தங்களின் மரபு இசைக்கருவிகளுடன் வந்திருந்தனர். 20ஆம் தேதி தொடங்கிய போராட்டமானது, அரசாங்கத்தின் எழுத்துபூர்வமான உறுதிமொழியை அடுத்து 21 நள்ளிரவில் விலக்கிக்கொள்ளப்பட்டது.