நாதஸ்வரம், மிக நுணுக்கமான பழமையான ஒரு இசைக்கருவி. இப்போதிருக்கும் வடிவத்தில் 13ஆம் நூற்றாண்டிலிருந்தே புழக்கத்திலிருக்கிறது இந்த இசைக்கருவி. தென்னிந்தியாவிலுள்ள பல சமூகங்களின் பண்பாடுகளிலிலும் நாதஸ்வரங்களுக்கு ஒரு முக்கிய இடம் இருக்கிறது. திருமணங்களில், கோவில்களில், விழாக்களில் இசைக்கப்படும் முக்கிய கருவியாக நாதஸ்வரம் இருக்கிறது. நாதஸ்வரத்தை உருவாக்குவதென்பது சவாலான திறமையான ஒரு வேலை. தலைமுறைகளாக அதை செய்து வருபவர்கள் முழுவதும் கைகளாலேயே அதை உருவாக்குகிறார்கள்.
நரசிங்கபேட்டை மிக அற்புதமாக நாதஸ்வரத்தை உருவாக்கும் பலர் இருக்கிறார்கள். தலைமுறைகளாக குடும்பங்களாக அவர்கள் இந்த கலையை செய்து வருகிறார்கள்.
மேலும் வாசிக்க:
நரசிங்கபேட்டையின் நாதஸ்வர நாயகர்கள்
தமிழில்: கவிதா முரளிதரன்