கலைமாமணி டி.எ.ஆர். நாடி ராவ் பொய்க்கால் குதிரை ஆட்டத்தின் மிகச் சிறந்த கலைஞர். தற்போது அவருக்கு வயது 74. இந்த கலை வடிவம் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து உருவானது. தனது 67 வயது மனைவி காமாட்சி உடன் பொய்க்கால் குதிரை ஆடும் ராவ், தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறார்.

மன்னராட்சி காலத்தில் அரசவைகளில் இந்த கலை வடிவம் முக்கிய இடம் பிடித்திருந்தது. மேலும் கோவில் விழாக்களின் போது கோவில் சிலைகளுக்கு முன்னர் இக்கலைஞர்கள் நடனமாடி செல்வது வழக்கம். தற்போது திருமண விழாக்களிலும் அரசு நிகழ்சிகளிலும் இக்கலை இடம் பெற்று வருகிறது. தஞ்சையை சேர்ந்த இக்கலைஞர்கள் மகாராஷ்டிராவை பூர்வீகமாக கொண்டவர்கள். தங்கள் வீடுகளில் மராட்டிய மொழியில் பேசும் இவர்கள், துல்ஜாபவானி என்னும் பெண் கடவுளை வழிபடுகின்றனர். மராட்டிய மாநிலம் ஒஸ்மானாபாத் நகரில் இக்கடவுளுக்கான பிரதான ஆலயம் அமைந்துள்ளது.

பொய்க்கால் குதிரை ஆட்டத்திற்க்கு மராட்டிய பூர்வீகம் கொண்ட குண்டல வாத்தியம் இசைக்கப்படுகிறது. 20 ஆண்டுகள் முன்பு வரை இக்கலைக்கு பெரும் அங்கீகாரம் இருந்து வந்ததால் ஆட்டக் கலைஞர்களுக்கும், வாத்திய கலைஞர்களுக்கும் தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்ள முடிந்தது. இன்று இக்கலைக்கான அங்கீகாரம் குறைந்து விட்டதால் முழு நேர தொழிலாக கலைஞர்களால் முன்னெடுத்து செல்ல முடியவில்லை. மிகச் சிறந்த கலைஞரான நாடி ராவின் குடும்பமும் தங்கள் வருமானத்திற்க்காக விவசாய தொழிலில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தொகுப்பு - எம்.அருண் பொன்ராஜ், வீடியோ எடிட்டர், அனிமேட்டர் மற்றும் ஒளிப்பதிவாளர்
ஓளிப்பதிவு - ராய் பெனடிக்ட் நவீன், புகைப்பட கலைஞர், ஒளிப்பதிவாளர் மற்றும் குறும்பட இயக்குநர்

தமிழில்: ஆ நீலாம்பரன்

பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கும் நீலாம்பரன் ஆ, 13 வருடங்களாக பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்திருக்கிறார். தற்போது நியூஸ் கிளிக் ஊடகத்தில் பத்திரிக்கையாளராக பணிபுரிகிறார். அரசியல், கிராமப்புற விவசாயம் மற்றும் உழைப்பாளர் பிரச்னைகளில் ஆர்வம் கொண்டவர்.

Aparna Karthikeyan

அபர்ணா கார்த்திகேயன் சுதந்திரமாக இயங்கும் ஊடகவியலாளர். PARI அமைப்பின் தன்னார்வலர். தமிழக கிராமங்களில் மறைந்து வரும் வாழ்வாதாரங்களை ஆவணப்படுத்தி வருகிறார்.

Other stories by Aparna Karthikeyan