'வெளியாட்கள் உள்ளே நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது' -  என்று சியாதேகி கிராமத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள மூங்கில் பதாகைகள் தெரிவித்தன. இந்த நிரூபர் சத்தீஸ்கரில் உள்ள தம்தாரி மாவட்டத்தின் நாகரி வட்டத்தில் உள்ள கிராமத்திற்கு சென்ற போது தடுப்பிற்கு அருகே அமர்ந்திருந்த ஒரு குழு அவரிடம் பேசுவதற்காக எழுந்து வந்தனர் ஆனால் அவர்கள் சமூக விலகலை கடைபிடித்தனர்.

"கொடிய வைரஸான கொரோனாவிடம் இருந்து எங்களை பாதுகாத்துக் கொள்ள இந்த தடுப்புகளை உருவாக்க கிராமவாசிகளாகிய நாங்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்", என்று அருகிலுள்ள காங்கர் மாவட்டத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றும் பாரத் துருவ் கூறினார். சத்தீஸ்கரின் தலைநகரான ராய்ப்பூரில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சியாதேகி கிராமம் கிட்டத்தட்ட 900 கோண்டு ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த மக்களைக் கொண்டுள்ளது.

"நாங்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க விரும்புகிறோம். ஊரடங்கு நேரத்தில் வெளியாட்கள் யாரும் எங்கள் கிராமத்திற்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை, அதேவேளையில் விதிகளை மீறி உள்ளூர் ஆட்கள் வெளியே செல்வதையும் நாங்கள் விரும்பவில்லை. அதற்காகவே இந்த தடுப்புகளை அமைத்துள்ளோம்", என்று குறு விவசாயி மற்றும் விவசாயத் தொழிலாளியாக அதே கிராமத்தில் பணியாற்றும் ராஜேஷ் குமார் நீதம் தெரிவித்தார்.

"எல்லா விதமான தொடர்பையும் தவிர்ப்பதற்காகவே இங்கு வருபவர்களை நாங்கள் தடுத்து நிறுத்துகிறோம். நாங்கள் அவர்களை தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பிச் செல்லும்படி வலியுறுத்துகிறோம்", என்று விவசாய தொழிலாளியான சாஜீராம் மாண்டவி கூறினார். "எங்கள் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மகாராஷ்டிராவிற்கு திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பணியாற்றுவதற்கு புலம்பெயர்ந்தனர், ஆனால் அவர்கள் ஹோலிப் பண்டிகைக்கு முன்பே திரும்பிவிட்டனர்", என்று மேலும் கூறினார். "இருப்பினும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களின் விவரங்களை சேகரித்து வைத்துள்ளனர்" என்று அவர் கூறினார்.

சியாதேகிக்கு இப்போது திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை என்ன? அவர்கள் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கப்படுகின்றனரா? "ஆம்", அனுமதிக்கப்படுகின்றனர் என்று பஞ்சாயத்து அதிகாரியான மனோஜ் மேஷ்ராம் கூறினார். ஆனால் அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி அவர்கள் தனிமைப்படுத்தப் படுகின்றனர்.

Left: In Siyadehi village of Dhamtari district, Sajjiram Mandavi, a farm labourer, says, 'We are stopping all those coming here to avoid any contact'. Right: We saw similar barricades in Lahsunvahi village, two kilometres from Siyadehi
PHOTO • Purusottam Thakur
Left: In Siyadehi village of Dhamtari district, Sajjiram Mandavi, a farm labourer, says, 'We are stopping all those coming here to avoid any contact'. Right: We saw similar barricades in Lahsunvahi village, two kilometres from Siyadehi
PHOTO • Purusottam Thakur

இடது: சத்தீஸ்கரில் உள்ள தம்தாரி மாவட்டத்தில் உள்ள சியாதேகி கிராமத்தில், 'எல்லா விதமான தொடர்பையும் தவிர்ப்பதற்காகவே இங்கு வருபவர்களை நாங்கள் தடுத்து நிறுத்துகிறோம்', என்று விவசாயத் தொழிலாளியான சாஜீராம் மாண்டவி கூறினார்.

வலது: சியாதேகி கிராமத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லசூன்வாகி கிராமத்திலும் இதே போன்ற தடுப்புகளை நம்மால் காண முடிகிறது.

இருப்பினும், நாடு முழுவதும் மத்திய அரசு வகுத்த தனிமைப்படுத்தலின் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் பல்வேறு விதமாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது அதில் குழப்பமும் பலவேறு வித்தியாசங்களும் மாநிலங்களுக்கு இடையிலும் மாவட்ட நிர்வாகத்தினர் மத்தியிலும் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் மத்தியிலும் இருக்கிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்த தகவல்களைப் பற்றி சியாதேகி மக்கள் எங்கிருந்து பெற்றனர்? "தொலைகாட்சி மற்றும் செய்திதாள்களிலிருந்து பின்னர் மாவட்ட நிர்வாகத்தினால் அறிவுறுத்தப்பட்டனர்", என்கிறார் மேஷ்ராம். மேலும் அவர் "நாங்கள் எங்களை பாதுகாத்துக் கொள்வதன் மூலம் எங்களது குடும்பத்தினரையும் மற்றும் எங்களது கிராமத்தையுமே பாதுகாக்கிறோம்", என்று கூறினார்.

அவர்களின் வருவாய் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் நம்மிடம் தெரிவித்தார், "முதலில் இந்த வைரஸிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதுவே பெரிய பிரச்சனை. அதன் பின்னர் தான் சம்பாதிப்பதை பற்றி எல்லாம் சிந்திக்க வேண்டும்", என்று கூறினார்.

மத்திய அரசு அறிவித்த 'நிவாரணங்களைப்' பற்றி அவர்கள் கேள்வி பட்டிருக்கின்றனர். "அதை நாங்கள் பெறும் வரை அதைப் பற்றி கூறுவதற்கு ஒன்றுமில்லை", என்று இரண்டு மூன்று பேர் ஒரு சேரக் கூறினர்.

கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் மரத்தின் மீது ஏறி சில வயர்களை முடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதைப் பற்றி விளக்குகையில், "இந்த தடுப்பு அமைப்பை நாங்கள் இரவு 9 மணி வரை விளக்கு ஏற்றி பாதுகாக்கப் போகிறோம்", என்று கூறினர்.

சியாதேகியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 500 மக்களைக் கொண்ட கிராமமான லசூன்வாகியிலும் நம்மால் இதே போன்ற தடுப்பு அமைப்புகளைக் காணமுடிகிறது. இதுவும் பெரும்பாலும் கோண்டு ஆதிவாசி மக்களைக் கொண்ட கிராமம். இங்கு தடுப்பு அமைப்பில் இருந்த பதாகையில் 'சட்டப்பிரிவு144  அமலில் உள்ளது அதனால் 21 நாட்களுக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது' என்று எழுதப்பட்டிருக்கிறது மற்றொரு பதாகையில் 'வெளியூர்க்காரர்கள் உள்ளே நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

"நாங்கள் வெளியூரில் இருந்து வருபவர்களை குறிப்பாக நகர்ப்புறங்களில் இருந்து வருபவர்களை தடுத்து நிறுத்துகிறோம்", என்று தடுப்பு அமைப்பில் நின்று கொண்டிருந்த உள்ளூர் விவசாய தொழிலாளியான காசிராம் துருவ் கூறினார். எதனால் நகர்ப்புற மக்கள்? "அவர்கள் தான் வெளிநாடுகளுக்கு சென்று வந்திருக்கின்றனர் அவர்களால் தான் இந்த வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருக்கிறது", என்று அவர் கூறினார்.

பஸ்தர் பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் இத்தகைய தடுப்பு அமைப்புகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

Mehtarin Korram is a mitanin (known elsewhere as an ASHA) health worker, thee frontline foot-soldiers of the healthcare system at the village level. She says, 'If I get scared, who will work?'
PHOTO • Purusottam Thakur
Mehtarin Korram is a mitanin (known elsewhere as an ASHA) health worker, thee frontline foot-soldiers of the healthcare system at the village level. She says, 'If I get scared, who will work?'
PHOTO • Purusottam Thakur

ஆஷா ஊழியரான மெஹதாரின் கொர்ரம், கிராம அளவில் சுகாதார துறையில் பணியாற்றும் முதல் நிலை ஊழியர். 'நானே பயந்து போய் இருந்தால் யார் வேலை செய்வது?' என்று அவர் கேட்கிறார்.

தம்தாரி - நாகரி சாலையில் உள்ள மற்றொரு கிராமமான காடாதாவில் தடுப்புகள் இல்லை. ஆனால் இங்கே நாங்கள் ஆஷா ஊழியரான மெஹதாரின் கொர்ரம்-யை சந்தித்தோம். அவர் அப்போது தான் மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணான அனுபாபாய் மாண்டவியின் வீட்டில் இருந்து வருகிறார். மெஹதாரின் அப்பெண்ணுக்கு தேவையான மருந்துகளை கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.

"கொரோனா வைரஸ் தொற்று பற்றி எங்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது", என்று அவர் கூறினார். "நான் ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் சென்று தனித்தனியாக அவர்களை சமூக விலகலை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தினேன். அதே போல் அவர்களது கைகளை மீண்டும் மீண்டும் கழுவும் படி", கூறியிருக்கிறேன். இதை அவர்களிடம் கூட்டம் போட்டு போட்டு தெரிவித்தீர்களா? "இல்லை, கூட்டம் போட்டால் மக்கள் ஒருவருக்கு ஒருவர் அருகில் அமர்ந்து விடுவர். எங்களுடையது சிறிய கிராமம் தான் 31 வீடுகளே உள்ளன.  அதனால் நான் ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக சென்று கூறினேன்", என்று கூறினார்.

அவரும் அவரது சகாக்களும் இந்த சமூக விலகலை கடைபிடிப்பதில் மிகவும் கவனத்துடன் இருக்கின்றனர் என்று அவர் கூறினார். ஒரு சந்தர்ப்பத்தில் அவர், "கும்கதா கிராமத்தில் உள்ள அசோக் மார்க்கம் இன் வீட்டில் ஓரு இறுதிச்சடங்கு நடைபெற்றது. எனவே நான் பனாரவுத், கும்கதா மற்றும் மரதாபோடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆஷா பணியாளர்களுடன் அவரது வீட்டிற்கு சென்று அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களிடம் சமூக விலகலை கடைபிடிக்கும் அறிவுறுத்தினோம். இறுதிச் சடங்கு நடைபெற்று முடியும் வரை நாங்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தோம்", என்று கூறினார்.

இந்த காலகட்டத்தில் அவர் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? "நாங்கள் எங்களது முகங்களை ஒரு துணி அல்லது துண்டை கொண்டு மூடி கொள்வோம் மேலும் கைகளை சோப்பு அல்லது டெட்டால் போட்டு கழுவிக் கொள்வோம்", என்று கூறினார்.

ஆனால் அவர்களுக்கு எந்த முகக் கவசமும் வழங்கப்படவில்லை என்று அவர் உறுதிப்படுத்துகிறார்.

கிராம அளவில் ஆஷா பணியாளர்களே சுகாதாரத் துறையை சேர்ந்த முதல் நிலை ஊழியர்கள். மருத்துவரோ அல்லது பிற மருத்துவ பணியாளர்களோ அரிதாக காணப்படும் கிராமங்களில் இவர்களே முக்கியமானவர்கள். அவர்களுக்கு எந்த தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகளும் இல்லாமல் இருப்பது இந்த காலகட்டத்தில் அவர்கள் பாதிக்கப்படுவதை மிகவும் எளிதாக்குகிறது.

மெஹதாரின் மார்க்கம் பயப்படவே இல்லை: "நானே பயந்து போய் இருந்தால் யார் வேலை செய்வது? யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் நான் தான் அங்கு சென்று அவர்களைப் பார்க்க வேண்டும்", என்று அவர் கூறினார்.

தமிழில்: சோனியா போஸ்

Purusottam Thakur

Purusottam Thakur is a 2015 PARI Fellow. He is a journalist and documentary filmmaker and is working with the Azim Premji Foundation, writing stories for social change.

Other stories by Purusottam Thakur
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose